இவனெல்லாம் மனுஷனா..? மிருகமா..? “7 வயது மகளைக் கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த அரக்கன்” மனைவியையும் விட்டு வைக்கல… சென்னையை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இவனெல்லாம் மனுஷனா..? மிருகமா..? “7 வயது மகளைக் கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த அரக்கன்” மனைவியையும் விட்டு வைக்கல… சென்னையை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

  • சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குள் புகுந்த சதீஷ் என்பவர், அங்கிருந்த தனது மனைவி ரெபேக்காவை கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளார். கடந்த ஆண்டு தனது மனைவி ரெபேக்காவைத் தாக்கிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், அதன் பிறகு தனது 7 வயது பெற்ற மகளையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இத்தகைய கொடூரக் குற்றத்தைச் செய்த பிறகும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த அவர், தற்பொழுது மீண்டும் தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் வங்கிக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கத்தியால் பலத்த காயமடைந்த ரெபேக்கா உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற சதீஷை அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரும் துரத்திப் பிடித்து மீண்டும் அதிரடியாகக் கைது செய்தனர். ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நபர், மீண்டும் அதே குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் கொலை செய்யத் துணிந்த இந்தச் சம்பவம் சென்னைப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குற்றவாளிகளுக்கு எளிதில் ஜாமீன் கிடைப்பது குறித்த சட்ட விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in