அடச்சீ.. காமக் கண்ணை மறைத்ததால் வந்த வினை.. 6 மாதக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கள்ளக்காதலனுக்காக பெற்ற தாயே செய்த பாதகச் செயல்.. குலைநடுங்க வைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. காமக் கண்ணை மறைத்ததால் வந்த வினை.. 6 மாதக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கள்ளக்காதலனுக்காக பெற்ற தாயே செய்த பாதகச் செயல்.. குலைநடுங்க வைக்கும் கொடூரம்..!!

Published

on

இன்ஸ்டாகிராம் காதலுக்காகத் பெற்ற தாயே தனது 6 மாதக் குழந்தையைக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஷபானா என்ற திருமணமான பெண்ணிற்கு, ஹாபூரைச் சேர்ந்த விஷால் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், ஷபானா தனது 6 மாதக் குழந்தைக்கு மருந்து வாங்கி வருவதாக வீட்டின் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு காதலனுடன் சென்றுள்ளார். ஆனால், அந்தச் சிறு குழந்தையை ஏற்கக் காதலன் விஷால் மறுத்துள்ளார்.

இதனையடுத்து, பெற்ற தாயும் காதலனும் சேர்ந்து அந்த 6 மாதப் பிஞ்சுக் குழந்தையைக் சாக்கடையில் தூக்கி வீசியுள்ளனர். இதில் மூச்சுத்திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சாக்கடையில் குழந்தையின் உடலைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட தாயையும் அவரது காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தன் கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையைக் கொன்ற இந்த இரக்கமற்ற சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in