“ஐயோ அண்ணா என்ன விட்ருங்க பிளீஸ்” ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுமி… கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று.. விஷயம் தெரிந்து கதறியபடி ஓடிய தாய்… அடுத்து நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ அண்ணா என்ன விட்ருங்க பிளீஸ்” ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுமி… கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று.. விஷயம் தெரிந்து கதறியபடி ஓடிய தாய்… அடுத்து நடந்த கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் 14 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தனது வீட்டின் அருகில் உள்ள 8 வயது சிறுவனுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விம்லேஷ் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து, சிறுமியை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்ற 8 வயது சிறுவன், அரை கிலோமீட்டர் தொலைவில் புல் வெட்டிக் கொண்டிருந்த சிறுமியின் தாயாரிடம் தகவலைக் கூறியுள்ளான். தாயார் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வருவதற்குள், குற்றச்சாட்டிற்குரிய இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில், தாயார் நவாப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அடையாளம் காணப்பட்ட விம்லேஷ் மற்றும் அவரது நண்பர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்ஸோ (POCSO) ஆகிய கடுமையற்ற சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in