ஐயோ இது என்ன கொடுமை.. 4 ஆண்டுகளாக 16 குழந்தைகளை அடைத்துவைத்து கொடூர சித்திரவதை.. பெற்றோரே செய்த துரோகம்.. காட்டுமிராண்டிகள் போல் மீட்கப்பட்ட அவலம்.. உலகை உலுக்கும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ இது என்ன கொடுமை.. 4 ஆண்டுகளாக 16 குழந்தைகளை அடைத்துவைத்து கொடூர சித்திரவதை.. பெற்றோரே செய்த துரோகம்.. காட்டுமிராண்டிகள் போல் மீட்கப்பட்ட அவலம்.. உலகை உலுக்கும் பகீர் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில், 18 மாதங்கள் முதல் 18 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகள் கடந்த 4 ஆண்டுகளாக மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு சிறிய கான்கிரீட் அறைக்குள் மனிதக் கழிவுகள், பூச்சிகள் மற்றும் குப்பைகளுக்கு நடுவே அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைத்துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மீட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் குழந்தைகள் பலரும் காட்டுமிராண்டிகள் போல மாறியிருப்பதாகவும், அவர்களில் சிலரால் பேச முடியாமல் விசித்திரமான ஒலிகளை மட்டுமே எழுப்ப முடிவதாகவும், 18 வயது மூத்த பெண் தனது பெயரைக் கூட எழுதத் தெரியாத அளவிற்கு முற்றிலும் கல்வியறிவு இல்லாமல் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தை, சித்தி, தாத்தா மற்றும் பாட்டி ஆகிய நால்வரும் எந்தவித ஆவணங்களையும் உருவாக்காமலும், பள்ளிகளில் சேர்க்காமலும் சுமார் 20 ஆண்டுகளாகக் குழந்தைகளைப் பொதுமக்களின் கண்களில் படாமல் மறைத்து வந்துள்ளனர். ஆபத்தான மற்றும் மோசமான உடல்நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி மிகவும் குளிர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த நான்கு கொடூரக் குற்றவாளிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in