“உச்சகட்ட கொடூரம்..! நண்பரை அடித்துப் போட்டு.. இளம்பெண்ணிற்கு நேர்ந்த நரக கொடூரம்.. இருசக்கர வாகனத்தை வழிமறித்துக் காமவெறியில் ஆடிய போதை மிருகங்கள்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உச்சகட்ட கொடூரம்..! நண்பரை அடித்துப் போட்டு.. இளம்பெண்ணிற்கு நேர்ந்த நரக கொடூரம்.. இருசக்கர வாகனத்தை வழிமறித்துக் காமவெறியில் ஆடிய போதை மிருகங்கள்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 25 வயது இளம் பெண் மற்றும் அவரது நண்பரை மதுபோதையில் இருந்த ஒரு கொடூரக் கும்பல் வழிமறித்துத் தாக்கி, நகை, செல்போன்களைப் பறித்துவிட்டு அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்துவிட்டுத் தனது நண்பருடன் அதிகாலை 4.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது. அக்கும்பல் இருவரையும் அடித்துத் துன்புறுத்தி, அருகிலிருந்த வாய்க்கால் மதகுக்குக் கீழ் உள்ள மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று, தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்துக் கொண்டு இப்படியொரு கொடூரப் பாலியல் அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 9 பேரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு முன்பாகவே இதே போதை கும்பல் மங்கைநல்லூர் கடைவீதியில் தகராறில் ஈடுபட்டதும், அதனை அப்பகுதியினர் வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது. அந்த கும்பலின் முந்தைய அராஜக நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தகவல் தெரிந்திருந்தும், பெரம்பூர் போலீஸார் உரிய நேரத்தில் தடுத்து ஆக்ஷன் எடுக்காததே இத்தகைய கொடூர விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி உள்ளூர் மக்கள் காவல்துறையின் அலட்சியப் போக்கு குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in