பகீர்..! 26 வயது பெண்ணின் அலறல் சத்தம்.. தம்பதியை வழிமறித்து 7 பேர் செய்த கொடூர காரியம்.. காட்டுக்குள் பாய்ந்த ரோந்துப் போலீஸ்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! 26 வயது பெண்ணின் அலறல் சத்தம்.. தம்பதியை வழிமறித்து 7 பேர் செய்த கொடூர காரியம்.. காட்டுக்குள் பாய்ந்த ரோந்துப் போலீஸ்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களை வழிமறித்த அக்கும்பல், தங்களது கூட்டாளிகளையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. பின்னர் இருவரையும் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியதுடன், அவர்களின் செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். மேலும், அந்த கும்பல் 26 வயதான பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்நேரத்தில் அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், ரோந்துப் படை போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணைக் காப்பாற்றினர். காவல்துறையினரைக் கண்டதும் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் பாப்லூ பன்ஜாரா, சோட்டு பன்ஜாரா உள்ளிட்ட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in