“என்னா தூக்கம்யா..!” பாபர் அசாம் பேட்டிங் செய்தபோது ஸ்டேடியத்தில் நடந்த கூத்து… கமெண்டேட்டர் சொன்ன அந்த கலாய் வார்த்தை.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னா தூக்கம்யா..!” பாபர் அசாம் பேட்டிங் செய்தபோது ஸ்டேடியத்தில் நடந்த கூத்து… கமெண்டேட்டர் சொன்ன அந்த கலாய் வார்த்தை.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் போது, மைதானத்தின் பார்வையாளர்கள் வரிசையில் தம்பதி ஒன்று தூங்குவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒளிபரப்பு கேமராக்களில் பிடிபட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், வைரலான அந்த வீடியோவில் வர்ணனையாளரின்  கருத்து தான் மிகவும் நகைச்சுவையான பகுதியாக அமைந்தது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் ஆகியோர் அணியை மீட்க முக்கியக் கூட்டாண்மையை அமைத்துக் கொண்டிருந்தபோது, இந்தத் தருணம் ஒளிபரப்பு கேமராவில் படம்பிடிக்கப்பட்டது. அதில், ஒரு நபர் தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் தோளில் தலைசாய்த்து உறங்குவது போலக் காணப்பட்டார். சன்கிளாஸ் அணிந்திருந்த அந்தப் பெண் தன் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக அருகில் அமர்ந்திருந்தார்.

Advertisement

35.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 158/3 என இருந்தபோது பாபர் 15 ரன்களுடனும், மசூத் 77 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 320 ரன்கள் முன்னிலை பெற்று நெருக்கடி அளித்த நிலையில், இந்த இருவரும் பாகிஸ்தான் அணி மீண்டு வர உதவினர். வைரலான இந்தத் தருணத்தைப் பார்த்த டிவி வர்ணனையாளர், “நீண்ட நேரமாக விக்கெட்டுகள் எதுவும் விழாததால் பழக்கமில்லாமல் இரண்டு பேரை இழந்துவிட்டோம்…” என்று நகைச்சுவையாகக் கூறினார். தொடர்ந்து இந்த கூட்டாண்மை மேலும் வலுவடைந்தது; மசூத் 95 ரன்கள் எடுத்தார், பாபர் அரைசதம் கடந்து அசத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in