“நெஞ்சே பதறுது..” எரியும் நெருப்பில் அந்த நபர் ஊற்றிய ‘அந்த’ திரவம்.. நொடியி தீயில் கருகிய புதுமணப் பெண்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெஞ்சே பதறுது..” எரியும் நெருப்பில் அந்த நபர் ஊற்றிய ‘அந்த’ திரவம்.. நொடியி தீயில் கருகிய புதுமணப் பெண்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சிட்டாங் மலைப் பகுதியில், தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதியில் பார்பெக்யூ சமைத்தபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மணப்பெண் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிகிதா மற்றும் சௌவிக் தம்பதிக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து, அவர்கள் தேனிலவுக்காக இந்த மலை விடுதிக்கு வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 13 நள்ளிரவில், அங்கு பார்பெக்யூவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோது, எதிரே நின்ற நபர் ஒருவர் எரியும் நெருப்பில் கேன் ஒன்றில் இருந்த திரவத்தை ஊற்றியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகத் தீ விபரீதமாகக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி, நொடிப் பொழுதில் நிகிதாவின் உடல் முழுவதும் பற்றிப் படர்ந்தது.

நெருப்புச் சுடர் சூழ்ந்த அதிர்ச்சியில் நிகிதா கீழே விழுந்ததைத் தொடர்ந்து, பதறிய அவரது கணவர் சௌவிக்கும், அங்கு நின்ற மற்ற நபரும் தங்களது சட்டைகளைக் கழற்றித் தீயை அணைக்கப் போராடினர். இந்த விபத்தில் உடலின் பல பாகங்களில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிகிதா, தற்போது சிலிகுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் அதீத ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது. விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்றும், விபத்து நடந்தவுடன் அவர்கள் உரிய அவசர மருத்துவ உதவி எதையும் வழங்கவில்லை என்றும் நிகிதாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in