CRIME
“அடக் கொடுமையே.. 5 நண்பர்களுடன் ஜாலியாக சென்ற போது நேர்ந்த கொடூரம்.. மரத்தில் மோதி சுக்குநூறான கார்.. 2 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற மூன்றாம் ஆண்டு மாணவர், தனது கல்லூரித் தோழிகளான மதுப்பிரியா, காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூரை நோக்கிக் கிளம்பியுள்ளார். கவுதம் காரை ஓட்டிச் சென்றபோது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை இழந்ததால், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் பள்ளிக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மரத்தில் மோதியது.
இந்தக் கொடூர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாகச் சேதமடைந்ததில், மாணவர் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காரில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி மதுப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகிய மூன்று மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாங்கல் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
