CRIME
“பைக்குள் இருக்கு பாருங்க..!” பாம்பு கடித்ததும் வாலிபர் செய்த காரியம்.. அலறியடித்து ஓடிய டாக்டர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் அதுல் என்ற 36 வயது வாலிபர் வசித்து வந்தார். இவர் தன்னை கடித்த பாம்பை ஒரு பையில் உயிரோடு பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் தனது வீட்டில் உள்ள மோட்டாரை இயக்குவதற்காகச் சென்றபோது, அங்கு எதிர்பாராத விதமாக மறைந்திருந்த பாம்பு ஒன்று அவரது கையை கடித்தது. சிறிது நேரத்திலேயே உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்குள் நுழைந்த அதுல், தன்னிடம் இருந்த பையைக் காட்டி “என்னை கடித்த பாம்பு இதற்குள்தான் இருக்கிறது” என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான காரணத்தை விளக்கிய அதுல், தன்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்று தெரிந்தால்தான் மருத்துவர்கள் அதற்கு தகுந்தாற்போல் சரியான விஷமுறிவு மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் தான் பாம்பைப் பிடித்து வந்ததாகக் கூறினார். அவரது இந்தச் சாதுரியமான செயலால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்தப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் மேலும் 3 பேரை பாம்புகள் கடித்ததால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
