“அடக்கொடுமையே.. ஒரே பைக்கில் சென்ற 3 கல்லூரி நண்பர்கள்..” பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கொடுமையே.. ஒரே பைக்கில் சென்ற 3 கல்லூரி நண்பர்கள்..” பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான முகமது அர்ஷத் (19), முகமது பகத் (18), முகமது ஹசன் (19) ஆகிய மூன்று பேர், தொடர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர பைக் விபத்தில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கிப் படித்து வந்த இவர்கள் மூவரும், நேற்று இரவு ஒரே பைக்கில் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். புல்லங்குடி அருகே சென்றபோது, இவர்களது பைக் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் முன்னால் சென்ற அரசுப் பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த மோதலின் வேகத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நண்பர்கள் மூன்று பேர் மீதும் அரசுப் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் முகமது ஹசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரையும் மீட்ட போலீசார், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுள் முகமது பகத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்பொழுது படுகாயமடைந்த முகமது அர்ஷத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் மற்றும் பைக் சென்ற வேகம் குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in