உச்சகட்ட அவலம்.. மயக்க மருந்து கொடுத்து 5 மிருங்களின் வெறிச்செயல்.. 4 நாட்கள் அடைத்து வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட அவலம்.. மயக்க மருந்து கொடுத்து 5 மிருங்களின் வெறிச்செயல்.. 4 நாட்கள் அடைத்து வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பிண்ணனி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் சிமன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கோவிலுக்குச் சென்ற சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை கோவிலில் விளக்கேற்றுவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்ட அந்தச் சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், செப்டம்பர் 28 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், செப்டம்பர் 30 ஆம் தேதி குற்றவாளிகளின் பிடியிலிருந்து தப்பித்து சிறுமி வீடு திரும்பினார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவர் கூறுகையில், சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு நபர் அவருக்கு லிஃப்ட் கொடுத்ததாகவும், ஆனால் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த தண்ணீரைக் கொடுத்து, தனது நண்பர்கள் நால்வரை வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் என்பதும், அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உஜ்ஜைன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் ஷர்மா இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, தலைமறைவாக உள்ள மீதமுள்ள மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in