“என்னடா இது திருடனுக்கும் வந்த சோதனை..” பெண்ணிடம் செயினைப் பறித்த திருடன்.. கவரிங்னு தெரிஞ்சதும் கடுப்பாகி ரோட்லயே வீசிட்டு ஓடிட்டான்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என்னடா இது திருடனுக்கும் வந்த சோதனை..” பெண்ணிடம் செயினைப் பறித்த திருடன்.. கவரிங்னு தெரிஞ்சதும் கடுப்பாகி ரோட்லயே வீசிட்டு ஓடிட்டான்..!!

Published

on

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு இளைஞர், திடீரென அந்தப் பெண் அணிந்திருந்த தாலி செயினைப் பிடித்து இழுத்து பறிக்க முயன்றார்.

உடனே சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், அந்த நபரிடம் கடுமையாக எதிர்த்துப் போராடினார். இருப்பினும், அந்த நபர் அந்த இளம்பெண் அணிந்திருந்த தாலி செயினைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். சிறிது தூரம் சென்ற பிறகு, தான் பறித்துச் சென்ற செயினை அந்த நபர் கூர்ந்து கவனித்துள்ளார்.

Advertisement

அப்போது அது தங்கம் அல்ல, கவரிங் நகை என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அவர், அந்தச் செயினை நடுரோட்டிலேயே தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து விரக்தியுடன் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in