CRIME
“என் பொண்டாட்டிக்கு ஏன்டா மெசேஜ் அனுப்புற” மனைவிக்கு தொல்லை கொடுத்தவரை வெளுத்து வாங்கிய கணவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்த சரக்கு வாகன ஓட்டுநரைத் தாக்கிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த 34 வயதான கோகுல்ராஜ் என்பவர் ஒரு சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோகுல்ராஜ் அந்தப் பெண்ணிற்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சில குறுஞ்செய்திகளை அனுப்பி, அவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தனது மனைவிக்கு வேறொரு நபர் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு செய்வதை அறிந்த அவரது கணவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் கோகுல்ராஜை நேரில் சந்தித்து இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், ஓட்டுநர் கோகுல்ராஜை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த கோகுல்ராஜ் அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கணவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
