“எங்க மகளைக் காணோம்…” கதறும் குடும்பம்… கையில் பேக்குடன் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்ற சிறுமி மாயம்.. பதறவைக்கும் பின்னணி.!! – cinefeeds
Connect with us

Uncategorized

“எங்க மகளைக் காணோம்…” கதறும் குடும்பம்… கையில் பேக்குடன் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்ற சிறுமி மாயம்.. பதறவைக்கும் பின்னணி.!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் – கல்பனாவுக்கு, பெஸ்டி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் சூழல் நிலவுகிறது. இதனால் சிறுமி பெஸ்டி தனது தாய் மற்றும் தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தாய் கல்பனா தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், சிறுமி தாத்தா மற்றும் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தீவிரமாகத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியை மீட்கும் பணிகளில் உடனடியாக இறங்கினர்.

Advertisement

முதற்கட்ட விசாரணையில், ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமி கையில் பையுடன் தனியாக நின்றதை சிலர் பார்த்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி தனது சொந்த ஊருக்குத் தனியாகச் செல்ல முயன்றாரா அல்லது வேறு யாரேனும் அவரை அழைத்துச் சென்றனரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in