LATEST NEWS
“நானும் பெண் தான்” த.வெ.க-வின் கொள்கை இதுதானா..? ஆபாசச் சித்தரிப்புகளுக்கு எதிராகப் பாய்ந்த மேயர் பிரியா.. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி ஆபாசமாகவும் இழிவாகவும் கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். பொது வாழ்வில் இருக்கும் பெண் என்ற ஒரே காரணத்திற்காகத் தொடர்ந்து குறிவைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி இந்த சட்டப்பூர்வமான புகாரை அவர் தந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) “Virtual Warriors” என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள், உண்மையில் இணையவழி அவதூறுகளைப் பரப்பும் “Virtual Abusers” ஆகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், பொது வெளியில் ஒரு பெண்ணை இப்படி ஆபாசமாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், த.வெ.க.வைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் மாண்பு உள்ளதா அல்லது மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடா எனத் தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
