CRIME
அடிப்பாவி.. படிக்க வைக்க நிலத்தை விற்ற கணவன்.. அரசு வேலை கிடைத்ததும்.. மனைவி செய்த பச்ச துரோகம்.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலத்தில், தனது மனைவியைப் படிக்க வைப்பதற்காக நிலத்தை விற்றுப் பாடுபட்ட கணவனை, அரசு வேலை கிடைத்தவுடன் வேறொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு ஏமாற்றிய பெண் ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு அமன் குமார் மற்றும் குஞ்சன் குமாரி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது குஞ்சன் குமாரி பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தார். தனது மனைவியைப் பெரிய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆசையில், கணவன் அமன் குமார் இரவும் பகலும் உழைத்து அவரது உயர்கல்வி, பி.எட் மற்றும் பிபிஎஸ்சி தேர்வுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டார். இதற்காகக் கடந்த 2022-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான ஒன்றரை கத்தா நிலத்தையும் அவர் விற்றுள்ளார். கணவனின் தியாகத்தால் கடந்த 2024-ஆம் ஆண்டு குஞ்சன் குமாரி பிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
அரசு வேலை கிடைத்த சில நாட்களிலேயே குஞ்சன் குமாரியின் போக்கு மாறத் தொடங்கியது. தனது பழைய நண்பரும், சக ஆசிரியருமான பிரேம் பிரகாஷ் ஜெய்ஸ்வால் என்பவருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட அவர், தன்னைப் படிக்க வைத்த கணவனையும், 10 வயது மகனையும் தவிக்கவிட்டுப் பிரிந்து சென்றார். கடந்த மே 23, 2026 அன்று லிச்சாவி நகரிலுள்ள ஒரு வாடகை வீட்டில் குஞ்சன் குமாரியும் அவரது கள்ளக்காதலனும் ஒன்றாக இருந்தபோது, கணவன் அமன் குமார் அவர்களைக் கைக் கள்ளனுமாகப் பிடித்துள்ளார். மனைவியின் இந்தத் துரோகத்தால் நிலைகுலைந்து போயுள்ள கணவன் அமன் குமார், தற்போது தமக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறி அவரிடமிருந்து விவாகரத்து (Divorce) கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
