CRIME
“கல்விக்கூடமா இல்ல சித்ரவதைக் கூடமா..?” 6 வயதுச் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்.. தனியார் பள்ளியில் அரங்கேறிய கொடூரத்தின் உச்சம்..!!
ராஜஸ்தான் தோல்பூர் மாவட்டத்தின் சாம்பூ பகுதியில் அமைந்துள்ள ‘மானவ் ரச்னா இன்டர்நேஷனல் பள்ளி’ என்ற தனியார் பள்ளியில், கொடூரத்தின் உச்சமாக 6 வயதுச் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதௌரா பகுதியைச் சேர்ந்த ராம்நிவாஸ் ஜாதவ் என்பவரின் பேரனும், சுனில் என்பவரின் மகனுமான பியூஷ் (6), அப்பள்ளியில் 1-ஆம் வகுப்புப் படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளியின் நிறுவனரான சந்தீப் என்பவர், அந்தப் பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் பியூஷை மரக்கட்டையால் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடத்திலேயே, அதன் நிறுவனரால் 6 வயதுச் சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி நிறுவனர் சந்தீப் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
