எனக்கும் அந்த பழக்கம் இருக்கு, நான் அடிக்கடி பண்ணி இருக்கேன்.. வெளிப்படையாக பதில் சொன்ன நடிகை பூமிகா..!! - Cinefeeds
Connect with us

CINEMA

எனக்கும் அந்த பழக்கம் இருக்கு, நான் அடிக்கடி பண்ணி இருக்கேன்.. வெளிப்படையாக பதில் சொன்ன நடிகை பூமிகா..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். டெல்லியை சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அடுத்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்காத நிலையில் மற்ற மொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி குடும்பத்தை கவனித்து வந்த இவர் மீண்டும் படங்களில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை கண்டார். அப்போது தொகுப்பாளர் உங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளதா, ஒரு முறையாவது மதுவை சுவைத்துள்ளீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு பூமிகா, ஆம் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று ஓபனாக பதில் அளித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.