TRENDING
நடிகையை “காதலித்து வந்த இளைஞர்” : நடிகையின் தாயிடம் செய்த தொந்தரவு… ‘ஆசிட் வீச முயற்சி’…! வெளிவந்த பகீர் தகவல்…?

சென்னையில் நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நடிகை மீது ஆசிட் வீசுவதாக கூறிவந்த இளைஞர். நடிகையின் தாய் கொடுத்த பூக்காரின் பேரில் இளைஞர் மற்றும் அவரது தந்தை என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரும் எங்களை மிரட்டி வந்தனர் அதில் ராஜசேகரன் எங்கள் உறவினர் என்று, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக் கொண்டிருக்கும் போது, ராஜசேகரன் மகன் அமுதன் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.
மேலும் வீற்றிக்கே வந்து ஸ்ருதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார், ஸ்ருதி மற்றும் அவரது தாய் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தனது மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அமுதன் தொந்தரவு செய்து வந்ததாகவும், இதுதொடர்பாக 4 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அமுதன் வீடியோவும் வெளியிட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கோவையை சேர்ந்த 5 பேர் கொண்ட அடியாட்களுடன் சேர்ந்து எங்களிடம் பணம் பறிக்க முயற்சித்தனர் , மேலும் எங்கள் மீது பொய் புகார்கள் அளித்து, அதனை திரும்பப் பெறுவது போல நாடகமாடியதாகவும் நடிகை சுருதியின் தாய் சித்ரா தெரிவித்துள்ளார். தற்போது படிப்பு முடிந்து ஸ்ருதி வெளிநாட்டில் இருந்து மீண்டும் சென்னை வரப்போகிறார், அதனால் கடந்த 5-ம் தேதி ஸ்ருதியின் தாயான சித்ராவிடம் , உங்கள் மகள் ஸ்ருதியை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசப்போகிறேன் என்று ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் மிரட்டியதாக’ ஸ்ருதியின் தாய் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நடிகையின் தாய் அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரன், மற்றும் அவரது மகன் அமுதன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் , நடிகை ஸ்ருதி மற்றும் தாய் சித்ரா ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் மூலமாக பலரையும் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பிய நிலையில், அந்த விவகாரத்தில் ராஜசேகரனுக்கும், அமுதனுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.