TRENDING
“பிக்பாஸ் வீட்ல இருக்கவங்க இவ்வளவு நல்லவங்களா”?…. கோபத்தில் பொங்கி எழுந்த கமல்ஹாசன்…. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் பல போட்டியாளர்கள் வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வந்த கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனால் அவருக்கு பதில் வேறு ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்குவார் என பல செய்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது குணமடைந்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திரும்பியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்க் பற்றி கமல் கோபமாக பேசி உள்ள ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் குற்றம் செய்தவர் யார் என நிஜமாகவே தெரியாதா இல்லை யாரும் தெரிவிக்க விரும்பவில்லையா, வீட்ல இருக்க எல்லாரும் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே, இவங்கள என்ன செய்யலாம் என கமல் கோபமாக பேசியுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Day48 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/E5cSnl4CTd
— Vijay Television (@vijaytelevision) November 26, 2022