TRENDING
‘கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிவேதா’… “தருமபுரி பெண்ணிற்கு சேலத்தில் நடந்த பதற்றம்”..? அறையில் கிடைத்த முக்கிய ஆதாரம்..?

தர்மபுரியை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா ( 23 ) இவர் அருகில் உள்ள சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் M.sc தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியிலே தங்கி படித்துவந்தார். விடுதியறையில் நிவேதாவுடன் இரண்டு மாணவிகள் தங்கிருந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புராஜெட்டுக்காக வெளியூர் சென்றிருந்தனர். இதனால் நிவேதா மட்டும் தனியாக இருந்தார்
பின்னர் இன்று காலை நீண்ட நேரமாகியும் நிவேதாவின் அறை திறக்கப்படவில்லை இதனால் சந்தேகமடைந்த பக்கத்து அறை மாணவிகள் ஜன்னலின் வழியே பார்த்தபோது நிவேதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் விடுதி காப்பாளர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் விடுதி அறையை சோதனை செய்த போலீசார் மாணவியின் பாட புத்தகங்களில் காதல் குறியீடு போன்றவை எழுதப்பட்டுள்ளது. கூடவே மூன்று பக்கம் கொண்ட கடிதம் கிடைத்து இதனால் காதல் தோல்வியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நிவேதாவின் வகுப்பில் மாணவி ஒருவருக்கு பேராசிரியரால் பாலியல் சில்மிஷம் நடந்த்து. அதே போன்று நிவேதவிர்க்கும் நடந்திருக்குமோ…? என்று கோணத்தில்…! போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்