முன்ஜாமீன் தள்ளுபடி.. கையெழுத்திட வராத செந்தில்பாலாஜி… அண்ணன் மருத்துவமனையில் அனுமதி என தம்பி விளக்கம்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முன்ஜாமீன் தள்ளுபடி.. கையெழுத்திட வராத செந்தில்பாலாஜி… அண்ணன் மருத்துவமனையில் அனுமதி என தம்பி விளக்கம்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. குதிரைபேர வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த செந்தில்பாலாஜி இன்று ஆஜராகவில்லை. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று அவரது தம்பி அசோக் குமார் மட்டுமே நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அண்ணன் செந்தில்பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளதால் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என்ற தகவலை அசோக் குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in