கோவிலுக்குச் சென்ற நடிகையை நடுரோட்டில் நிற்க வைத்த அவலம்…. மனம் வருந்திய அமலாபால்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவிலுக்குச் சென்ற நடிகையை நடுரோட்டில் நிற்க வைத்த அவலம்…. மனம் வருந்திய அமலாபால்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார்.  அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணி குளம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக அமலாபால் சென்றுள்ளார்.

Advertisement

அங்கு இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் வழக்கம் இருப்பதால் கிறிஸ்துவரான அமலாபால் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் நின்று தரிசனம் செய்யும்படி அங்கிருந்தவர்கள் தன்னை கூறியதாக அமலாபால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த காலகட்டத்திலும் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது எனவும் இனியாவது இது மாறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in