LATEST NEWS
“நான் பதிவு பண்ணிட்டேன், நீங்க?” மக்கள்தொகை கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கை அல்ல அதுதான்.. ஆன்லைன் லிங்க் பகிர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி வேண்டுகோள்..!!!
“நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மிக முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது” என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வெறும் மனிதர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி அல்ல என்றும், அரசு கொண்டு வரவிருக்கும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் பொதுமக்கள் வழங்கும் புள்ளிவிவரங்கள் தான் மிக முக்கிய அடிப்படையாக அமையப்போகிறது என்றும் அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பணியை எளிதாக்கும் வகையில், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே இணையவழியில் சுய கணக்கெடுப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த புதிய தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தித் தன்னுடயை விவரங்களை முதலமைச்சராகிய தானும் ஏற்கனவே பதிவு செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களைப் பற்றிய உண்மையான மற்றும் துல்லியமான விவரங்களை எவ்வித அச்சமுமின்றித் தெரிவிக்க வேண்டும் என்றும், நீங்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் முழுமையான ரகசியத்தன்மையுடன் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையோடு தொடங்கப்பட்டுள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஒவ்வொரு குடும்பமும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். “வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்” என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவரது இந்த நேர்மறையான வேண்டுகோள், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், எதிர்காலத் திட்டமிடலுக்கும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
