ஆண்கள் செய்ய அச்சப்படும் செயலை 2 குழந்தைக்கு தாயான ஜோதி செய்து காட்டினாள் ….? வியப்புடன் பார்த்தவர்கள் ….. - cinefeeds
Connect with us

TRENDING

ஆண்கள் செய்ய அச்சப்படும் செயலை 2 குழந்தைக்கு தாயான ஜோதி செய்து காட்டினாள் ….? வியப்புடன் பார்த்தவர்கள் …..

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய்யான ஒரு பெண் மின்கம்பத்தில் சரசரவென ஏறி மின்கம்பத்தில் கயிறு கட்டும் தேர்வின் முதல் இடம் பிடித்துள்ளார், இது ஒரு சாதனை நிகழ்வாகும் இதுவரை ஆண்கள் மட்டுமே மின்கம்பத்தில் ஏறி மின்சாரம் பழுது பார்த்து உள்ளனர், ஆனால் இதுவரை யாரும் ஒரு பெண் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பழுது பார்த்தது இல்லை . இதுவே முதல் முறை, இதிலிருந்து நமக்கு ஒன்று புரிகிறது முயற்சி செய்தல் எதையும் சாதிக்கலாம் , ஒரு செயலை செய்து முடிக்க ஆன், பெண் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை அனைவரும் சமமே!..”முயற்சியுடையர் இகழ்ச்சி அடையார் “என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஒரு செயல் தெளிவுபடுத்துகிறது, இது நம் நாட்டிற்கு பெருமை.

குழந்தைகளுக்கு தாயான ஜோதி, மின்துறையில் மின்கம்பங்கள் பழுது பார்க்கும் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவிதான் ஜோதி. 2 குழந்தைகள் உள்ளனர்.ஐடிஐ தொழிற்கல்வியில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.படித்து முடித்துவிட்டு படிச்ச படிப்பு நாலு பேருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று நினைத்தார்.. அதற்காக மின்துறை சார்ந்த மின்கம்பம் ஏறுதல், மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் போன்ற செயல்களை பயிற்சி செய்து பார்த்து பின்பு இந்த மின்சாரத்துறை சார்ந்த பணிகளுக்கு அப்ளிகேஷன் போட்டார். இதற்கான உடற்தகுதித் தேர்வும் நடந்தது..

Advertisement

ஜோதி மின் கம்பத்தில் ஏறிய வேகத்தை பார்த்தால்,ஆச்சரியமாக உள்ளது , கடகடவென அசால்ட்டாக அந்த மின்கம்பத்தில் ஏறி, சீரமைப்பு பணியினை சிறப்பாக செய்து காட்டியதுடன் அதற்கான உடற்தகுதித் தேர்வில் தேர்வாகி விட்டார்.. மொத்தம் 1,170 பேர் உடல் தகுதி சோதனைக்கு வந்திருக்கிறார்கள்.. இதில் 337 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 61 வேட்பாளர்கள் பெண்கள், அவர்களில் ஒருவர் மட்டுமே இந்த தேர்வில் தகுதி பெற்றுள்ளதுதான் இதன் சிறப்பே!!! அவரே ஜோதி .

இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்தல் அதற்கு பலன் உண்டு முயற்சி தான் வெற்றியை தரும் அதுபோல் ஜோதியின் பல நாள் முயற்சி தன அவருக்கு இந்த புகழை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in