“டாக்டரானா கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. வாக்குறுதியை மீறி அக்கா மகளுக்கு டாக்டர் செய்த கொடூரம்.. . தஞ்சையில் தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“டாக்டரானா கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. வாக்குறுதியை மீறி அக்கா மகளுக்கு டாக்டர் செய்த கொடூரம்.. . தஞ்சையில் தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக, அவர் டாக்டரானதும் தனது மகளைத் திருமணம் செய்து கொள்வார் என்ற வாக்குறுதியின் பேரில் அப்பெண் 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். ஆனால், படிப்பை முடித்து டாக்டரானவுடன் செல்வவேல் தனது வாக்குறுதியை மீறியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வற்புறுத்திய அக்காவிடம் பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனிடையே, செல்வவேல் தனது அக்காவின் மகளுக்கு ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் அவதூறான குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக இருவரிடமும் தகாத முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை தனிப்படை போலீசார், சமீபத்தில் அரசு டாக்டராகப் பணி நியமனம் பெற்று தஞ்சை மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வவேலைத் தஞ்சைக்கே சென்று கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே தஞ்சை காவல் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in