LATEST NEWS
பூட்டும் உடையல.. கல்லா பெட்டியும் பத்திரமா இருக்கு… ஆனா நகைக் கடையில் ரூ.10 லட்சம் வைர நகைகளை அபேஸ் செய்த கில்லாடி யார்..? சிசிடிவியில் சிக்கிய பகீர் வீடியோ.. மிரண்டு போன நகைக்கடை ஓனர்..!!
கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில், பூட்டிய பூட்டு உடையாமலும், எவ்வித திருட்டு அடையாளங்கள் இல்லாமலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மாயமான விநோத திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த பூட்டுகளும், பாதுகாப்புப் பெட்டகங்களும் மிகவும் பாதுகாப்பாக இருந்ததால் நகைகள் எவ்வாறு திருடு போயின என்பது புரியாமல் கடையின் ஊழியர்கள் ஆரம்பத்தில் பெரும் குழப்பமடைந்தனர்.
இந்த மர்மத் திருட்டு குறித்து ஊழியர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில், ஒரு சிறிய எலி ஒன்று கடையின் அலமாரியில் இருந்த விலையுயர்ந்த வைர நகைகளைத் தனது வாயால் கவ்விக்கொண்டு மெதுவாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. எந்தவொரு மனிதனும் செய்யாத இந்தத் துணிகரத் திருட்டை ஒரு எலி செய்திருப்பதை ஊழியர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அந்த எலி சென்று வந்த பாதையை ஊழியர்கள் தீவிரமாகக் கண்காணித்தபோது, கடையில் இருந்த அதன் எலி வளையைக் கண்டுபிடித்தனர். அந்த எலி வளையைத் தோண்டிப் பார்த்தபோது ஊழியர்களுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த எலி தன் வளைக்குள் பத்திரமாகச் சேமித்து வைத்திருந்த 10 வைர மோதிரங்கள் மற்றும் 3 விலையுயர்ந்த வைர மாலைகள் எவ்வித சேதமுமின்றி முழுமையாக மீட்கப்பட்டன. இந்த அரிய எலி திருட்டு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
