“இனி என் மகள் தொடுவியா..?” ஆட்டோ ஓட்டுநருக்கு ஆத்திரத்தில் தாய் கொடுத்த கொடூர தண்டனை.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இனி என் மகள் தொடுவியா..?” ஆட்டோ ஓட்டுநருக்கு ஆத்திரத்தில் தாய் கொடுத்த கொடூர தண்டனை.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள டிரைவர்ஸ் காலனியில், தன் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற காதலனின் பிறப்புறுப்பைத் தாய் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர், தாடிபத்ரியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் சில காலமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த சுரேஷ், சுனிதாவின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, தன் மகளின் உதவியுடன் சுரேஷைக் கத்தியால் தாக்கி, அவரது பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளார்.

காயமடைந்த சுரேஷ் அதிக இரத்தப்போக்குடன் அப்பகுதி மக்களால் அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுனிதா காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுனிதா மற்றும் அவரது மகளிடம் வாக்குமூலம் பெற்று விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தன் மகளைப் பாதுகாக்கத் தாய் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அனந்தபுரம் பகுதியில் தற்போது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in