LATEST NEWS
காலையிலேயே அதிர்ச்சி…! யூடியூபர் சவுக்கு சங்கர் மகன் தியோ தற்கொலை… பெரும் சோகம்..!!
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ, மரக்காணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி, கணவரை பிரிந்து தனது தாயாருடன் மரக்காணத்தில் வசித்து வரும் நிலையில், தியோ அங்கு தங்கி படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தியோ படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தாததால் அவரது தாய் ஆர்த்தி கண்டித்ததாகவும், இதனால் மனமுடைந்த தியோ இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே மகனை இழந்து வாடும் சவுக்கு சங்கரின் குடும்பத்தினருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாடகி சின்மயி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சவுக்கு சங்கருக்கு ஆறுதல் கூறி தங்களது இரங்கல் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
