“என் ஷூ நனைஞ்சிடக் கூடாது..!” அதிகாரி செய்த ‘அந்த’ அநாகரீகக் காரியம்… 65 வயது ஏழை முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. கடுப்பில் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் ஷூ நனைஞ்சிடக் கூடாது..!” அதிகாரி செய்த ‘அந்த’ அநாகரீகக் காரியம்… 65 வயது ஏழை முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. கடுப்பில் நெட்டிசன்கள்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் மாதா கிராமத்தில், தனது காலணிகள் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையைக் கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி நிலேஷ் நம் தேவ் அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வனவிலங்குகள் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காகக் கள ஆய்வுக்குச் சென்ற அந்த அதிகாரி, வழியில் குறுக்கிட்ட ஒரு சிறிய ஓடையைக் கடக்க முதியவரான லால்வாகேவத் என்பவரைப் பயன்படுத்தியுள்ளார். அதிகார வர்க்கத்தின் உச்சகட்ட அலட்சியப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தச் சவாரி, அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, உதவிக்கோட்ட நடுவர் பிரியா பதக் உத்தரவின்பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அந்த வருவாய் அதிகாரி உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஏழை முதியவரைத் தனது சுயநலத்திற்காகச் சுமக்கச் செய்த அதிகாரியின் இந்த அநாகரீகச் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in