உதயநிதி என்ன கொண்டு வந்தார்..? அவர் மவுண்ட் ரோட்டைச் சுற்றினார்… திமுக-வை சீண்டிய தவெக அமைச்சர் மரியவில்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதி என்ன கொண்டு வந்தார்..? அவர் மவுண்ட் ரோட்டைச் சுற்றினார்… திமுக-வை சீண்டிய தவெக அமைச்சர் மரியவில்சன்..!!

Published

on

உதயநிதியைப் போல் முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்கு ரேஸ் கொண்டு வருவாரா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் மரியவில்சன் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். இக்கேள்விக்குக் பதிலளித்த அவர், “உதயநிதி என்ன கொண்டு வந்தார்? அவர் மவுண்ட் ரோட்டைச் சுற்றித் தான் டிரைவ் கொண்டு வந்தார். ஆனால், முதலமைச்சர் விஜய் மோட்டார் ரேஸ் அரங்கையே தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப் போகிறார்” என்று திமுக முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சாடிப் பேசியுள்ளார்.

சென்னையில் திமுக ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயத்தை ஒப்பிட்டுச் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் போட்டியாகத் தவெக அரசு மிகப் பிரம்மாண்டமான நிரந்தர மோட்டார் ரேஸ் அரங்கத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதை அமைச்சர் மரியவில்சன் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் விளையாட்டுத் துறை சார்ந்த திட்டங்களைச் சாதாரணமானவை என விமர்சித்து, தவெக அரசின் திட்டம் தொலைநோக்குப் பார்வையுடன் அமையப் போகிறது என அவர் கூறியுள்ள இந்த அதிரடிப் பேட்டி, திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in