“முன்பகை தான் காரணமா..?!” போன் பண்ணி வரவழைச்ச கொடூரம்.. கால்வாய் கரையில் வாலிபருக்குக் காத்திருந்த கொடூர முடிவு.. களக்காடு அருகே அரங்கேறிய திகில் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“முன்பகை தான் காரணமா..?!” போன் பண்ணி வரவழைச்ச கொடூரம்.. கால்வாய் கரையில் வாலிபருக்குக் காத்திருந்த கொடூர முடிவு.. களக்காடு அருகே அரங்கேறிய திகில் சம்பவம்..!!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், முன்விரோதம் காரணமாக ரமேஷ் ராம் (33) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் ரமேஷ் ராமை தொலைபேசியில் அழைக்க, அவரும் தனது உறவினர்கள் இருவருடன் மணிமுத்தாறு கால்வாய் கரைக்குச் சென்றுள்ளார். அங்கு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மோதலாக மாறவே, ஆத்திரமடைந்த கும்பல் ரமேஷ் ராமை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொடூரக் கொலை குறித்துத் தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே களக்காடு போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, இந்த வழக்குத் தொடர்பாக தற்போது முத்துராஜா என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய மற்றும் தலைமறைவாக உள்ள பிற நபர்களைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in