“என் மகனையே காதலிப்பியா..?” 22 வயது பி.டெக் மாணவருடன் காதல்.. காதலன் வீட்டுக்குப்போன 29 வயது டீச்சருக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மகனையே காதலிப்பியா..?” 22 வயது பி.டெக் மாணவருடன் காதல்.. காதலன் வீட்டுக்குப்போன 29 வயது டீச்சருக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்..!!

Published

on

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் 22 வயது மாணவனைக் காதலித்த 29 வயது பேராசிரியை, மாணவனின் வீட்டிற்குச் சென்றபோது அவரது பெற்றோரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன், தான் படித்து வரும் கல்லூரியிலேயே பணிபுரியும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவனின் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் தங்களது மகனின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், பேராசிரியை தனது காதலனான மாணவனைச் சந்திப்பதற்காகத் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும், பேராசிரியை என்றும் பாராமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியும் காயமும் அடைந்த பேராசிரியை, உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். மாணவனைப் பேராசிரியை காதலித்த விவகாரமும், அதைத் தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல் சம்பவமும் கல்வி வட்டாரத்திலும் அப்பகுதியிலும் தற்போதைய முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in