LATEST NEWS
“மூட்டைய கட்டிட்டு ரெடியா இருங்க… இது நீண்ட போராட்டமா இருக்கும்..!” காவல்துறையை அதிரவைத்த சி.ஜே.பி-யின் பகிரங்க சவால்..!!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்யக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 10-ம் தேதியன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், டெல்லி காவல்துறைக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் அறிவிப்பையும் வழங்கியுள்ளார்.
இப்போராட்டம் மிகவும் பெரிய அளவில் இருக்கும் என்றும், அதற்கேற்ப டெல்லி காவல்துறை தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த சௌரவ் தாஸ், “நாங்கள் முறைப்படியான அறிவிப்பைச் சமர்ப்பித்துவிட்டோம்; டெல்லி காவல்துறையினர் தங்களது பைகளை மூட்டை கட்டித் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும், இந்தப் போராட்டம் ஒரு சில மணி நேரங்களில் முடியக்கூடியது அல்ல என்றும், இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும் என்பதால் காவல்துறை அதிக அளவிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகளுடன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர் அளித்த இந்த சவால் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் எஸ்சிஆர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவைத்து இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை சி.ஜே.பி அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
