LATEST NEWS
“என் சாவுக்கு இவங்கதான் காரணம்…” கல்யாணம் ஆகி 5 மாதத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு..! மனைவியின் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் அரங்கேறிய சோகம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 30 வயதான தேவேந்திர சர்மா என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு மனைவியின் குடும்பத்தினரே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 11 அன்று ஜெய்ப்பூரின் ஜாம்டோலி பகுதியில் உள்ள வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இறந்தவரின் குடும்பத்தினர் கூறுகையில், கடந்த ஏப்ரல் 29 அன்று தேவேந்திர சர்மா மற்றும் அவரது சகோதரர் அன்ஷு ஆகிய இருவருக்கும் ரிங்கு, கிருஷ்ணா என்ற இரு சகோதரிகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த நான்காவது நாளே இரு மனைவிகளும் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். சுமார் 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து வீட்டிலிருந்த நகை மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றதுடன், வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினர்.
மனைவி வீட்டின் மிரட்டல் மற்றும் காவல்துறையின் கெடுபிடிகள் காரணமாகவே தேவேந்திர சர்மா மன அழுத்தத்திற்கு ஆளாகி இந்த முடிவை எடுத்துள்ளார் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அக்டோபர் 11 மாலை அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இதுகுறித்து ஜாம்டோலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
