LATEST NEWS
தவெக எம்எல்ஏ மீது ஆபாச மெசேஜ் புகார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்..? – வெளியான செய்தியால் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசுத் தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, ஒரு மாதத்திற்கு முன்பே தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் என். ஆனந்திடம் ஆட்சியர் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதாகவும் அந்தத் தனியார் இதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
