“இப்போ என்ன நான் விஜய்யை திட்டணுமா..? தவறான கருத்துகளைத் தெரிவிக்க மாட்டேன்..” நிருபர்களின் கேள்விக்கு சுரேஷ் கோபி கொடுத்த நச் பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்போ என்ன நான் விஜய்யை திட்டணுமா..? தவறான கருத்துகளைத் தெரிவிக்க மாட்டேன்..” நிருபர்களின் கேள்விக்கு சுரேஷ் கோபி கொடுத்த நச் பதில்..!!

Published

on

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும், தொலைவில் இருந்து நான் பார்ப்பதை விட களத்தில் இருப்பவர்களிடம் கேட்டால்தான் உண்மையான நிலவரம் தெரியும் என்றும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல் மீதான வரியை ஒவ்வொரு மாநிலமும் குறைக்க முடியும். மத்திய அரசு நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மீதான வரியை ஏற்கனவே குறைத்துள்ளது. கேரளாவிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களில் எந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

Advertisement

இப்போ என்ன நான் விஜய திட்டனுமா?… நான் விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்றால், முதலில் விஷயங்களைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். தவறான கருத்துகளைத் தெரிவிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in