பிறந்ததுமே என் மகன் அரவிந்த் சாமியை தத்து கொடுத்துட்டேன்.. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் டெல்லி குமார்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிறந்ததுமே என் மகன் அரவிந்த் சாமியை தத்து கொடுத்துட்டேன்.. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் டெல்லி குமார்..!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார். இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இடையில் சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது இவரின் நடிப்பில் நரகாசுரன், கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

Advertisement

இந்நிலையில் அரவிந்த்சாமியின் அப்பாவும் பிரபல நடிகருமான டெல்லி குமார் சமீபத்தில் தனது மகன் குறித்து பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. என்னுடைய மகன் தான் அரவிந்த்சாமி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவன் பிறந்தது மே என்னுடைய அக்காவிற்கு குழந்தை இல்லாததால் அவரை தத்து கொடுத்து விட்டேன். அவ்வளவுதான் அதன் பிறகு அவர் அதிகமாக என்னிடம் ஒட்டிக் கொண்டது கிடையாது.

ஃபங்ஷன் போன்ற முக்கியமான நேரங்களில் மட்டுமே வருவார் ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசிவிட்டு கிளம்பி விடுவார். அவரை அளவுக்கு அதிகமான பாசத்தோடு என்னுடைய சகோதரி வளர்த்து விட்டதால் அவர்களை தான் அப்பா அம்மா என்று அரவிந்த்சாமி மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்படியே வாழ்ந்து வருகின்றார். இருந்தாலும் எப்போதும் அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று டெல்லி குமார் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement