TRENDING
விஜய் லியோ -ரஜினி 2.o படங்களில் … முதல் வார வசூலில் … முதல் இடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா?

லோகேஷ் கலகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வீடியோ லியோ. இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படமானது கடந்த 19ஆம் தேதி விஜயதசமி விடுமுறை ஸ்பெஷலாக திரைக்கு வந்தது.
மேலும் பிற படங்களை போன்று இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா போன்று ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் திரைக்கு வந்த முதல் வாரத்திலேயே ரூ. 461+ கோடி வசூல் செய்ததாக 7 கிரீன்ஸ் மூவி சார்பாக அறிவிப்பு வெளியானது. இதுவே உலக அளவில் முதல் வாரத்தில் அதிகமாக வசூல் செய்த படம் என்று கருதபடுகிறது.
இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 2.o முதல் வாரத்தில் வசூல் செய்த தொகையை குறித்து தகவல் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இபடமானது சயின்ஸ் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் வெளிவந்தது. லைகா நிறுவனம் சார்பில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்த முதல் வாரத்தில் ரூ. 500 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தியானது தற்பொழுது ரசிகர்களால் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் விஜய் நடிப்பில் வந்த லியோ படமானது முதல் வார வசூல் ரூ 461 கோடிதான் வசூல் செய்துள்ளதால் வசூல் சாதனையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.மேலும் ரஜினியின் 2.o திரைப்படமே முதல் இடத்தை பெற்று இருப்பது தெளிவாக தெரியவருகிறது.