ரத்தக் காடான பாகிஸ்தான்… “சாலை எங்கும் பிணக்குவியல்கள்” – பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி.. உலக்கையை உலுக்கிய கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரத்தக் காடான பாகிஸ்தான்… “சாலை எங்கும் பிணக்குவியல்கள்” – பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி.. உலக்கையை உலுக்கிய கொடூரம்..!!

Published

on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவப் படையினர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ராவலகோட் பகுதியின் டிரேக் எய்த் என்ற இடத்தில் இந்த வன்முறை வெடித்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் அவாமி ஆக்ஷன் கமிட்டி உறுப்பினர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் இந்த அடக்குமுறையை ஏவியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இஸ்லாமாபாத் அரசு 14,000-க்கும் மேற்பட்ட ஆயுதப்படையினரை அங்கு குவித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஸ்னைப்பர்கள் எனப்படும் மறைந்திருந்து தாக்கும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தப்படுவதோடு, அசல் தோட்டாக்கள் மற்றும் நீண்ட தூரம் பாயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் அங்கு இணையம் மற்றும் மொபைல் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன, மேலும் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சாலைகளில் போராட்டக்காரர்களின் சடலங்கள் சிதறிக் கிடப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. ஆகஸ்ட் 10 வரை மூன்று கட்டங்களாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 45 தொகுதிகளுக்கான போலித் தேர்தலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in