“எதுக்காக இப்படி பண்றீங்க”…. நான் இன்னும் சாகல உயிரோடுதான் இருக்கேன்….நடிகை லக்ஷ்மி வருத்தம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எதுக்காக இப்படி பண்றீங்க”…. நான் இன்னும் சாகல உயிரோடுதான் இருக்கேன்….நடிகை லக்ஷ்மி வருத்தம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கலக்கியவர் தான் நடிகை லக்ஷ்மி. இவர் முதன்முதலாக 1961 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடிப்பில் வெளியான ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை வள்ளியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 70 மற்றும் 80களில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகின்றார்.

வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி வந்தால் இவருக்கு 70 வயது நிறைவடைகின்றது. இந்நிலையில் இவர் உயிரிழந்து விட்டதாக இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இதனால் பலரும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்த நிலையில் அது முற்றிலும் வதந்தி என தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போன் செய்து விசாரித்த ஒரு நபர் கூறுகையில், நான் நன்றாகவே இருக்கிறேன்.

Advertisement

இந்த உலகில் பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக நான் ஒருபோதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. தேவையில்லாமல் இது போன்ற வததியை யாரும் பரப்ப வேண்டாம் என மன வருத்தத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in