CRIME
“என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு!”.. அத்துமீறிய 67 வயது மாமனார்… ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை அறுத்த 23 வயது மருமகள்… குலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 67 வயது மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்த 23 வயது மருமகள் சையதா, அவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சையதாவின் கணவர் ஹரியானாவில் ரிக்ஷா ஓட்டி வரும் நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் முசாபர்நகரில் உள்ள வீட்டில் மாமனாருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, மாமனார் தினந்தோறும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சையதா தெரிவித்துள்ளார்.
ससुर से तंग आकर बहु ने काटे ससुर के प्राइवेट पार्ट!
67 वर्षीय ससुर हर दिन अपने 23 वर्षीय बहु सैयदा के साथ जबरदस्ती करता था उससे तंग आकर ससुर का काट दिया।
सैयदा का पति हरियाणा में रिक्शा चलाता है,यहां बहु दो बच्चों के साथ रहता है,इनका कहना है कि हर दिन ससुर छेड़खानी करता था ।… pic.twitter.com/kpCFAtmmCt— Subhajit Das (@SantaniSubhajit) July 18, 2026
மாமனாரின் தொடர் அத்துமீறல்களாலும், கட்டாயப்படுத்துதல்களாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சையதா, வேறு வழியின்றி இந்தத் தீவிர முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், படுகாயமடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
