CRIME
நம்பிக்கை துரோகத்தின் உச்சம்!.. பாலில் கலந்த ‘தூக்க மாத்திரை’… படுக்கையறையில் காத்திருந்த ‘விஷப்பாம்பு’.. கணவனை அழிக்க கள்ளக்காதலனுடன் மனைவி தீட்டிய அடுக்கடுக்கான ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அதுல் பன்வார் என்பவரை, அவருடைய மனைவி தாமினி தனது கள்ளக்காதலன் துஷாருடன் சேர்ந்து விஷப்பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் நடத்தி வந்த அதுல் பன்வாரின் பள்ளியில் துஷார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கும் தாமினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தங்களது காதலுக்குத் தடையாக இருந்த அதுலைத் தீர்த்துக்கட்ட முதலில் சாலை விபத்து மூலம் திட்டமிட்டு அது தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒரு நாள் இரவு அதுலுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தாமினி மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், படுக்கையறையில் விஷப்பாம்பை ஏவி அவரைக் கடிக்க வைத்துக் கொலை செய்துள்ளனர்.
முதலில் இது இயற்கை மரணம் போலக் காட்டப்பட்டாலும், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்தச் சதியின் பின்னணி அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரெண்டு அபிஜித் குமார் கூறுகையில், இந்த கொடூரக் கொலைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதுலின் பெயரில் இருந்த 20 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதும், தங்களது கள்ளத்தொடர்பைத் தடையின்றித் தொடர்வதுமே இவர்களின் திட்டமாக இருந்துள்ளது. பாம்பு கடித்து இயற்கையாக இறந்தது போல நாடகமாடி தப்பிக்க முயன்ற தாமினி மற்றும் அவரது கள்ளக்காதலன் துஷார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
