டெல்லியில் நள்ளிரவு வேட்டை!.. ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்… சர்வதேச கும்பலை சேர்ந்த 3 பேர் கொடுத்த ‘பகீர்’ வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

டெல்லியில் நள்ளிரவு வேட்டை!.. ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்… சர்வதேச கும்பலை சேர்ந்த 3 பேர் கொடுத்த ‘பகீர்’ வாக்குமூலம்..!!

Published

on

இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, நாடு முழுதும் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த சட்டவிரோத சரக்கின் சர்வதேச மதிப்பு ₹1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தது, ‘ஆபரேஷன் வஜ்ரா’ என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்திற்குரிய இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு, ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பெரும் போதைப்பொருள் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வலையமைப்பில் தொடர்புடையதாக கேரளாவைச் சேர்ந்த உமேஷ்குமார், பிரதவுஸ் உட்பட 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சட்டவிரோத கும்பலின் பின்னணியில் உள்ள பிற முக்கிய நபர்கள் யார் என்பதையும், இச்சம்பவத்தின் முழுப் பின்னணியையும் கண்டறியும் நோக்கில் டெல்லி காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in