LATEST NEWS
“என் மக்களை விடமாட்டேன்!”.. போலீஸ் வண்டியை மறித்த ஒற்றைப் பெண்.. மும்பை வீராங்கனையின் வீரத்தால் மிரண்டுபோன காக்கி.. வைரலாகும் வீடியோ..!!
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் கடுமையான காவல் துறை நடவடிக்கையால் பல மாணவர்களும் காவல்துறினரும் காயமடைந்தனர். இந்நிலையில் வரலாற்றில் எப்போதும் நினைவில் கொள்ளப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
यह वीडियो इतिहास में याद रखा जाएगा।
कल मुंबई में शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान के इस्तीफे की मांग को लेकर आम नागरिकों ने शांतिपूर्ण प्रदर्शन किया
यह किसी राजनीतिक दल का नहीं, बल्कि आम लोगों का विरोध था
जब पुलिस प्रदर्शनकारियों को गाड़ी में बैठाकर ले जा रही थी, तभी एक बहादुर… pic.twitter.com/gP31Ehl6Ef— Rebellious 2.0🕊️ (@RebelliousPari8) July 23, 2026
நேற்று மும்பையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சாதாரண குடிமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இது எந்தவொரு அரசியல் கட்சியும் நடத்திய போராட்டம் அல்ல, மாறாகப் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டமாகும். அப்போது போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றபோது, ஒரு தைரியமான பெண் காவல்துறை வாகனத்தின் முன்பு அச்சமின்றி நின்றார். தன் சக போராட்டக்காரர்களின் குரலை ஒடுக்க நினைத்தவர்களுக்கு எதிராகத் தன் குரலை உயர்த்தி, அவர்கள் வாகனத்தை விட்டுச் செல்ல மறுத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
