CRIME
“அட பாவமே.. காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன்..” அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. கதறும் பெற்றோர்.. கோவையை உலுக்கிய நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து சிறுவன் உள்ளே சென்று விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக காரின் ‘சென்ட்ரல் லாக்’ பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காரின் கதவை உள்ளே இருந்து திறக்க முடியாமலும், கடுமையான வெப்பம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் சிறுவன் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளான்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தாய், பல மணி நேரத் தேடலுக்குப் பிறகு காரில் மயங்கிய நிலையில் கிடந்த தன் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவனைக் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் விளையாடும்போது அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைப்பதும், பயன்பாட்டில் இல்லாத கார் கதவுகளைப் பூட்டி வைப்பதும், காரின் சாவியைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத தூரத்தில் வைப்பதும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் உணர்த்துகிறது.
