மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்… கேரளாவில் வந்தே மாதரம் பாடப்படாது… காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்… கேரளாவில் வந்தே மாதரம் பாடப்படாது… காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேச்சு..!!

Published

on

பிரதமர் மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும் கேரளத்தில் வந்தே மாதரம் பாடப்படாது தரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது” என்று காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னித்தான் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தங்களைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டினாலும், கேரளாவில் முழுமையான வந்தே மாதரம் பாடலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், இந்த ஜென்மத்தில் தங்களால் முழுமையான வந்தே மாதரம் பாடலை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார்.

இவரது இந்த அதிரடியான கருத்து நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களிடையே விவாதங்களை கிளப்பியுள்ளது. தேசப்பற்று மற்றும் தேசியப் பாடல் தொடர்பான ராஜ்மோகனின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, கேரள அரசியல் களம் மட்டுமின்றி தேசிய அளவிலும் இந்த விவகாரம் தற்பொழுது சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in