LATEST NEWS
“பள்ளிக்கு வாங்க பேசிக்கலாம்” என்று கெஞ்சியும் விடாத இளைஞர்கள்..! ஆசிரியரை வீதியில் வைத்து வெளுத்தெடுத்த வன்முறைக் கும்பல்.. பதைபதைக்கும் வைரல் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பெடகுரபாடு பகுதியில், இரு கார்கள் லேசாக மோதிக்கொண்ட விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இளைஞர்கள் கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பதைபதைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டூரிலிருந்து பெடகுரபாடு நோக்கித் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த ஜம்பானி நரேஷ் பாபு என்ற ஆசிரியரின் கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த காரில் இருந்த இளைஞர்கள், ஆசிரியரின் காரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். “பள்ளிக்கு வாருங்கள், அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்” என்று ஆசிரியர் நரேஷ் பாபு எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதை மதிக்காத அந்த வன்முறைக் கும்பல் அவரது காரை விடாமல் துரத்திச் சென்றுள்ளது.
https://twitter.com/pulsenewsbreak/status/2093186404990042384/video/1
பள்ளிக்குச் செல்லும் சாலையிலேயே தங்களது இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி ஆசிரியரின் காரை மறித்த அந்த இளைஞர்கள், அவரை காரிலிருந்து வெளியே இழுத்து அநாகரிக அராஜக முறையில் தாக்கியுள்ளனர். கைகளாலும், சாலையோரம் இருந்த தென்னை மட்டைகளாலும் தங்களைக் கொடூரமாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர் காவல் நிலையத்தில் அளித்துள்ள அதிகாரப்பூர்வப் புகாரில் தெரிவித்துள்ளார். கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மீதே பொதுவெளியில் நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆந்திரப் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் எக்ஸ் பக்கங்களில் காரசாரமான விவாதங்களை எழுப்பி வருகின்றனர்
