“ஹோட்டலுக்குத் தான் போனாங்க… அதுக்குள்ள இப்படியா..?!” மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 3 வயது சிறுவன்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஹோட்டலுக்குத் தான் போனாங்க… அதுக்குள்ள இப்படியா..?!” மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 3 வயது சிறுவன்.. வைரல் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தோஷ் நகர் காவல் எல்லைக்குட்பட்ட ஐஎஸ் சதான் எக்ஸ் ரோட்ஸ் பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொஹியுதீன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, மொஹியுதீனின் 3 வயது மகன் இஜ்னான் உதீன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அவசரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சந்தோஷ் நகர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளியை விரைவில் அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கதறித் துடிக்கும் சிறுவனின் குடும்பத்தினருக்குப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in